உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!! -வருகிறது பயன்பாட்டிற்கு-
உலகின் மனிதகுலத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அச்சுறுத்திவரும் மலேரியாவுக்கு தடுப்பூசியைக் கண்டறித்து மருத்துவ உலகம் மற்றொரு பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பால் நேற்று அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் மலேரியா தடுப்பூசி முதன்முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. கொடிய மலேரியா நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்று தருணமாக இந்தத் தடுப்பூசி அமைந்துள்ளது.
மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக மலேரியா இருந்து வருகிறது. சிறுவர் மற்றும் குழந்தைகளின் மரணத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் நோயாக மலேரியா உள்ள நிலையில் இதற்கான தடுப்பூசி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கடும் முயற்சிகளுக்குப் பின்னர் மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக மலேசியா தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.