தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு!!
ஆப்கானிஸ்தானில் வைத்து தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார்.
ஆனால், ஆப்கான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தி தப்பிச்செல்ல உதவிய பென் சால்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலீபான்களால் கைது அவரை மீட்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், தலீபான்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து நாட்டின் 2 அதிகாரிகள் நேற்று காபூல் வந்தனர்.
அப்போது, முன்னாள் பாதுகாப்பு படை வீரர் பென் சால்டரை தலீபான்கள் விடுதலை செய்தனர். தலீபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த 2 அதிகாரிகள் சென்ற விமானத்தில் பென் சால்டரும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.