யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்கு 300 மில்லியன் ஒதுக்கியும் அபிவிருத்தி இல்லை! அரசுக்கு கூறுவேன், இந்திய வெளியுறவுத்துறை செயலர்..
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவுக்கான படகு சேவை உள்ளிட்ட விடயங்களில் அரசின் உயர் மட்டங்களுக்கு சுட்டிக்காட்டப்படும். என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்த இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பார்வையிட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடுத்த கட்ட புனரமைப்பிற்காக ஏற்கனவே இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.
விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பிலும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அரச உயர் மட்டங்களுடன் பேசி விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் காங்கேசன்துறை காரைக்கால் படகுச் சேவை
மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் படகு சேவை ஆகியவை தொடர்பிலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.