அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிற்றேன்!! -பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு-
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (வயது 76) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்:-
பெரும்பாலான மக்கள் பொது மன்றங்களில் எனக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நான் பதவியில் இருப்பதை இந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. மக்களின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன் என்றார்.