பிரேசில் ஜனாதிபதியை பதவி விலக கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!
பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அந்நாட்டில் அடுத்த ஆண்டு முக்கிய தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலையை அவர் கையாண்ட விதத்தில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அத்துடன் கொரோனா காரணமாக 6 இலட்சம் பேர் மரணித்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.