மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பைடன்!!
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், மூன்றாவது பைஸர் தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டுள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி அவர் வெள்ளை மாளிகையில் மூன்றாவது பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
78 வயதான அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் பைஸர் தடுப்பூசியையும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் பைஸர் தடுப்பூசியையும் அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரச சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல் கோவையின் பிரகாரம், அவர் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.