பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்!!
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மீது நபர் ஒருவர் முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி இம்மானுவேல் நேற்று கலந்துகொண்டார்.
பின் கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது நபரொருவரால் வீசப்பட்ட முட்டையொன்று அவரது தோள்பட்டை மீது விழுந்தது. எனினும் அந்த முட்டை அவர் மீது உடைந்து விழாமல் அவரின் தோள்பட்டையில் பட்டு கீழே விழுந்தது.
உடனடியாக ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் சம்பவ இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன், ஜனாதிபதி மீது முட்டை வீசிய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப்பிடித்ததனர்.