சகவாழ்வு அமைச்சின் தேசிய சித்திரை புத்தாண்டு விழா யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor
சகவாழ்வு அமைச்சின் தேசிய சித்திரை புத்தாண்டு விழா யாழ்ப்பாணத்தில்...

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா யாழ்ப்பாணம் - கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், வட மாகாண பதில் முதலமைச்சரும், வட மாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர், அரச அதிகாரிகள்,பொது அமைப்புகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது தமிழரின் பாரம்பரி விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்களை வழங்கி வைத்தார் அமைச்சர் மனோ கணேசன்.