கனேடிய பாராளுமன்ற தேர்தல்!! -பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி-
கனேடிய பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் 3 ஆவது முறையாகவும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகியுள்ளார்.
இத் தேர்தலில் ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கனசர்வேட்டிவ் கட்சி 103 இடங்களிலும் பிளாக் கியூபெகோயிஸ் 28 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி 22 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
இதனடிப்படையில், பாராளுமன்றில் அதிகபடியான ஆசனங்களை கைப்பற்றியுள்ள போதிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெறத் தவறியுள்ளது.