அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு தவறிழைத்துள்ளது. VIDEO

ஆசிரியர் - Editor
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு தவறிழைத்துள்ளது. VIDEO

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு த விர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதி இ.தவரூபனுக்காக குரல் கொடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

அனுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கை தி இ.தவரூபன் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படவில்லை. அவர் இன்றளவும் சந்தேக நபராகவே உள்ளார்.

இந்நிலையில் முன்னர் ஒருமுறை யாழ்ப் பாணம் அழைத்து வரப்பட்டபோது தப்பிக்க முயன்றார் எனவும் இப்போதும் அப்படியான திட்டம் அவரிடம் உள்ளதாகவும் கூறி கடந்த பல நாட்களாக மாலை 5 மணி தொடக்கம்  காலை 6 மணி வரை தனியான ஒரு சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

அந்த சிறை அறைக்குள் மலம் கழிப்பதற்கு தட்டு ஒன்றும், சிறுநீர் கழிப்பதற்காக போத்தல் ஒன்றும் வழங்கப்படுகிறது. ஒரு சந்தேக நபருக்கு இவ்வளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இதனை எதிர்து தவரூபன் கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவருகிறார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்க ள் தொடக்கம் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டுவந்தபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 

ஜ.நாவில் இலங்கைக்கு கால அவகசாம் வழங்க நிபந்தனையின்றி ஆதரவளித்த கூட்டமைப்பு, 2015ம் ஆண்டு இந்த அரசை உருவாக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்பு, பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நிபந்தனையற்ற வகையில் எதிர்ப்பு தெரிவித்த கூட்டமைப்பு

இவ்வாறான அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணாமல்போனவர்கள் விடயத்தில் அரசிடமிருந்து அல்லது மேற்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து வா க்குறுதி ஒன்றை பெற தவறியுள்ளது.

இனிமேலாவது இந்த விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றை நிச்சயம் எடுக்கவேண்டும் என்றார்.