அரசாங்கத்தில் உள்ளவர்கள் கெளதம புத்தர்களோ..? மகாத்மா காந்திகளோ..? கிடையாது.

ஆசிரியர் - Editor
அரசாங்கத்தில் உள்ளவர்கள் கெளதம புத்தர்களோ..? மகாத்மா காந்திகளோ..? கிடையாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எதனையும் செய்துள்ளதா என தெரியவில்லை. என கூறியிரு க்கும் அமைச்சர் மனோகணேஷன்,

அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக் கையில்லை. காரணம் அரசில் கெளதம பு த்தரகளோ, மகாத்மா காந்திகளோ இல்லை எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது எனவும் கூறியுள்ளார். 

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாள ர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரிவிக்கும்போதே மனோகணேஷன் மேற் கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறிகையில் பி ரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு த மிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எத னையாவது செய்துள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் இரு தரப்பிற்கும் இடை யில் பேச்சிவார்த்தை நடந்தபோது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன்.

அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறிவந்த விடய ங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள். மே லும் நாங்களும் உடன்படிக்கை எதனையு ம் செய்யவில்லை. அரசிடனான உடன்படிக் கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இது வரை எத்தனை உடன்படிக்கைகள் செய்ய ப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?

ஆகவே நாம் செய்யும் உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத் தரகளோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது என்றார்.