பிரிட்டன் பிரதமரின் தாயார் மரணம்!!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் சார்லோட் ஜோன்சன் வால் தனது 79 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு லண்டனின் செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திங்களன்று அவர் முறையில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.