யாழ்.மாவட்ட செயலர், பாவையாளர் அதிகாரசபை உறக்கம்! நிவாரண பொதியில் சுரண்டி தின்னும் ப.நோ.கூ சங்கங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலர், பாவையாளர் அதிகாரசபை உறக்கம்! நிவாரண பொதியில் சுரண்டி தின்னும் ப.நோ.கூ சங்கங்கள்..

கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரண பொதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

யாழ்.சங்கானை ஜே- 171 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பொதியிலையே மோசடி இடம்பெற்றுள்ளது.

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சீட்டையின் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொண்ட பொதி வழங்கப்பட்டுள்ளது. அதனை அப்பகுதி கிராம சேவையாளர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பம் ஒன்றுக்கு வழங்கி இருந்தார். 

அதனுள் இருந்த பொருட்களின் விலைகள் சாதாரண கடைகளின் விலைகளை விட அதிக விலைகளில் காணப்படுகின்றது. சாதாரண கடைகளில் மஞ்சள் பருப்பு அதிக பட்ச விற்பனை விலையாக 240 ரூபாயாக உள்ள போது , 

சீட்டையில் 300 ரூபாய் போடப்பட்டுள்ளது. அதேவேளை சீனியின் அதிக பட்ச விலை 125 ரூபாயாக உள்ள போது சீட்டையில் 200 ரூபாய் போடப்பட்டுள்ளது. அவ்வாறாக பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு செய்யப்பட்டு மோசடி இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரியுள்ளார். அதேவேளை யாழ்.மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய பாவனையாளர் அதிகார சபையினர் அதிக விலைகளுக்கு 

பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்நிலையிலையே சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்க சீட்டையில் பொருட்களுக்கு அதிக விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றிலும் சீனி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சாதாரண கடைகளில் 5 ரூபாய் அதிமாக பொருட்களை விற்பனை செய்தாலே சட்ட நடவடிக்கை எடுக்கும் பாவனையாளர் அதிகார சபையினர் 

பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதனை கண்டும் காணாதது போல நடந்து கொள்வது தொடர்பில் விசனங்கள் எழுந்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு