SuperTopAds

6 மாத கர்ப்பிணி பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!! -குடும்பத்தினர் முன் தலீபான்கள் செய்த கொடூர செயல்-

ஆசிரியர் - Editor II
6 மாத கர்ப்பிணி பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!! -குடும்பத்தினர் முன் தலீபான்கள் செய்த கொடூர செயல்-

ஆப்கானில் கர்ப்பிணி பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த செய்தியைதனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி பானு நிகரா. 

ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலீபான்கள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர். 

இருப்பினும் குறித்த கர்ப்பிணி பெண் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலீபான்கள் அறிவித்துள்ளனர்.