SuperTopAds

ஆப்கான் பெண்களுக்கு கட்டாய திருமணம்!! -முகாங்களில் நடக்கும் அடுத்தடுத்து சம்பவம்-

ஆசிரியர் - Editor II
ஆப்கான் பெண்களுக்கு கட்டாய திருமணம்!! -முகாங்களில் நடக்கும் அடுத்தடுத்து சம்பவம்-

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். 

தலீபான்கள் ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களின் பயணத்தை தடை செய்துள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பல பெண்கள் கட்டாய திருமணம் செய்து  வைக்கப்பட்டு அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற தகுதியுடையவர்களாக ஆக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு அமீரக முகாம் ஒன்றில்  ஆப்கான் பெண்களின் குடும்பங்களில் சிலர் தலீபான்களிடம் இருந்து தப்பிக்க திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர்  என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிஎன்என்  தெரிவித்துள்ளது.