ஆப்கானில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் தலிபான்கள்!! -முல்லா பரதர் தலைமை தாங்கி வழிநடத்துவார் என தகவல்-
தலிபான்களின் அரசியல் துறையின் தலைவர் முல்லா பரதர் ஆப்கானில் அமையும் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அமைக்கும் புதிய அரசாங்கத்தில் மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் புதல்வர் முல்லா மொஹட் யாகூப் மற்றும் ஷேர் மொஹமட் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் உயர் பதவிகளை வகிப்பார்கள். இந்த அறிவிப்புக்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.