காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ரொக்கெட் தாக்குதல்கள்!!
காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி 5 ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் குறித்த தாக்குதல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அமெரிக்க பணியாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த தாக்குதலில் குறைந்தது ஒரு குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.