ஆப்கானிலுள்ள ஐ.எஸ் இலக்குகள் மீது ஆளில்லா விமான தாக்குதல்!! -பதிலடி கொடுக்க ஆரம்பித்த அமொரிக்கா-
ஆப்கானிஸ்தானின் நாட்டின் நன்கஹார் பகுதியில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை இலக்கு வைத்து அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையதை அடுத்து காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் நேற்று முன்தினம் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தற்கொலை தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உட்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அந்நட்டின் நன்கஹார் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்க படை வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.