காபூல் தாக்குதலுக்கு தக்க பதிலடி!! -ஜோ பைடன் சூளுரை-
காபூல் விமான நிலையத்தில் நடந்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 சேவை உறுப்பினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுளுரைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றும் போது உணர்ச்சியுடன் பேசிய அவர் தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் காரணம் என்பதை உறுதி செய்தார்.
அதேநேரம் அமெரிக்கா இந்தச் செயலை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாது என்றும் கூறினார்.
குறித்த குண்டுத் தாக்குதலில் 60 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.