SuperTopAds

காபூலில் முதல்முறையாக சீனா-தலிபான்கள் பேச்சு!!

ஆசிரியர் - Editor II
காபூலில் முதல்முறையாக சீனா-தலிபான்கள் பேச்சு!!

ஆப்கன் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் புதின்கிழமை கூறியதாவது:

தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுடன் எந்தவித தடையுமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரு தரப்பிலும் தகவல்களும் ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமான விவகாரங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு காபூல் நகரம் முக்கிய தளமாகத் திகழ்கிறது.

ஆப்கன் மக்களின் உணர்வுகளையும் சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது. அந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது