SuperTopAds

தலீபான்கள் பயங்கரவாதிகள்தான்;!! -பொருளாதார தடை விதிப்பு குறித்து பரிசீலனை என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-

ஆசிரியர் - Editor II
தலீபான்கள் பயங்கரவாதிகள்தான்;!! -பொருளாதார தடை விதிப்பு குறித்து பரிசீலனை என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலீபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தலீபான்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ள விவகாரம் தொடர்பில் விவாதிக்க கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தது. 

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார். தலீபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.