ஹாமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்!!
பாலஸ்த்தீனிய - காஸா பகுதியில் நிலை கொண்டுள்ள ஹாமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மையில் எரிப்பொருள் அடங்கிய பலூன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த வான் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் குறித்த வான் தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.