அமெரிக்காவின் உயரமான மனிதர் வோவ்கோவின்ஸ்கி மரணம்!!
2010 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை ஊடாக அமெரிக்கா நாட்டின் உயரமான மனிதராக முடிசூட்டப்பட்ட இகோர் வோவ்கோவின்ஸ்கி தனது 38 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவர் இருதய நோயால் உயிரிழந்ததாக அவரது தாயாரான ஸ்வெட்லானா வோவ்கோவின்ஸ்கா உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
கின்னஸின் கூற்றுப்படி, வோவ்கோவின்ஸ்கி 7 அடி, 8.33 அங்குல உயரம் உடையவர்.
வோவ்கோவின்ஸ்கியின் மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரது சகோதரரின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டதாகவும், அவரது இறுதி இரவு நேர உணவை உண்டதாகவும் அவரது தாயார் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.