சிட்னியில் முடக்கல் நிலை மேலும் நீடிப்பு!!
அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கல் நிலை, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் தொற்றாளர் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிட்னி நகரில் உள்ள 5 மில்லியன் குடியிருப்பாளர்கள், கடந்த ஜூன் மாத இறுதி முதல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்கு கடந்த வாரம் தொற்றுப் பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.