SuperTopAds

தலிபான்களை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்!! -துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி: 12 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
தலிபான்களை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்!! -துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி: 12 பேர் காயம்-

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் 12ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான் கொடியை போராட்டக்காரர்களில் சிலர் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றினர்.

அப்போது அங்கு வந்த தலிபான்கள் போராட்டக்காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10ற்க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆப்கானிஸ்தான் தேசியக்கொடி அகற்றப்பட்டு தலிபான்களின் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்திருந்தபோதும் இவ்வாறு செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டமை அவர்கள் பயங்கரவாத சித்தாந்தத்தை தொடர இருப்பதையே காட்டுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.