தலிபான்களை மீண்டும் சீண்டும் அமெரிக்கா!! -பேஸ்புக்கை அடுத்து வட்ஸ்அப் கணக்குகளும் முடக்கம்-
தலிபான்களின் முகப்புத்தக கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் வட்ஸ் அப் கணக்குகளையும் முடக்குவதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மேலும், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் முகப்புத்தக கணக்குகளும், பதிவுகளும் நீக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ்-அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மெசஞ்சர் செயலியான வட்ஸ் அப், முகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.