புதிய ஆட்சியை அமைக்கவுள்ள தலிபான்கள்!! -ஆப்கான் விரையும் தலிபான் தலைவர்கள்-
ஆப்கானிஸ்தானிஸ்தான் நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை தலிபான் இயக்கத்தினர் மிக மும்முரமாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த முன்னெடுப்பிற்காக தலிபான் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அந்நாட்டிற்கு வந்துள்ளனர்.
நேற்று ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத் தலைவர்கள், அனைவருக்கும் பொது மன்னிப்பளிக்கும் அறிவிப்பை வெளியிட்டனர். அத்துடன், அமைதியைப் பேணி, ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு உயர்மட்டக் குழுவினர் தலிபான் போராளிகளை அறிவுறுத்தியதாகத் தெரியவருகிறது.