SuperTopAds

4 கார்களில் கட்டுக்கட்டாக பணத்துடன் தப்பியோடிய ஆப்கான் ஜனாதிபதி!! -திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது ரஷ்யா-

ஆசிரியர் - Editor II
4 கார்களில் கட்டுக்கட்டாக பணத்துடன் தப்பியோடிய ஆப்கான் ஜனாதிபதி!! -திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது ரஷ்யா-

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து தப்பிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் ஹெலிகாப்டரிலும் பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் ஓமனுக்கு தப்பிச் சென்றதாகவும் அவர்கள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.