அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு!! -நம்பிக்கையுடன் பணியாற்றுமாறு தலீபான்கள் அறிவிப்பு-
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ள தலீபான்கள், அவர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
அந்நாட்டில் தலீபான்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தாங்கள் அச்சத்துடனே இருப்பதாக ஆப்கானிஸ்தானியர்கள் பேட்டி அளிக்கும் காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலீபான்கள் அறிவித்துள்ளனர்.