SuperTopAds

சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு..

ஆசிரியர் - Editor I
சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவது தொடர்பாகவும், தமிழ் மக்களுடைய கரையோர பகுதிகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருவது தொடர்பாகவும் விரைவில் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையில் விரைவில் சந்தித்து பேசுவார்கள். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். முல்லைத்தீ மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும், வடமாகாணசபை அவை தலை தலைவர் சீ.வி.கே.சி வஞானம் தலமையில் 22 வரையான மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின்

 எல்லை கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்த பயணத்தின் நிறைவில் ஊடக ங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறி யுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணசபையின் 120வது அமர்வில் எடுக்க ப்பட்ட தீர்மானத்திற்கமைய மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று

வரும் அத்துமீறல்கள் தொடர்பாக நேரில் ஆராய்ந்துள்ளோம். இதன்போது தமிழ் மக்களுக்கு சொ ந்தமான பெருமளவு குடியிருப்பு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மகாவலி அதிகாரசபையினா ல் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். மேலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள மீனவர்கள்

அடாத்தாக தங்கியிருந்து தமிழ் மீனவர்களை தொழில் செய்யவிடாது தடுத்து வருவதையும் நாங் கள் நேரில் பார்த்திருக்கிறோம். இங்கு பார்த்த விடயங்களை நிரல்படுத்தி விரைவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கலந் து கொள்ளும் ஒரு பேச்சுவார்த்தை ஒழுங்கமைக்கப்படும். அந்த பேச்சுவார்த்தை முல்லைத்தீவு மா

வட்டத்தில் அல்லது வடமாகாணத்தின் எல்லைப் பகுதியில் மகாவலி அதிகாரசபையின் பெயரால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காக நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதற்கான பேச்சு வார்த்தையாக அமையும். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையின் ஊடாக

மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவேண் டும் எனக்கோரி மாகாணசபை உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரனிடம் சமர்பித்திருக்கின்றோம். மேலும் இந்த விடயம் தொடர்பாக 

தொடர் நடவடிக்கைகளை வடமாகாணசபை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.