வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்..!
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலில் பங்குபற்றிய
வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பா.செந்தில்நந்தனன் மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஆகியோரே இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.