தாய்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா!! -கட்டுப்படுத்த தவறிய பிரதமரை பதவி விலக கோரி போராட்டம்-
தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமரை பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சியும் போராட்டத்தைக் கலைத்தனர்.
அந்நாட்டில் இதுவரை 8 இலட்சத்து 39 ஆயிரத்து 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,942 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.