அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ!! -கட்டுப்படுத சென்ற 25 இராணுவத்தினர் உட்பட 42 பேர் பலி-
அல்ஜீரியாவில் தொடர்ச்சியாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ அங்குள்ள சுமார் 50ற்க்கு மேற்பட்ட இடங்களில் பரவியுள்ள நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 இராணுவத்தினர் உட்பட 42 பேர் நேற்று தீயில் கருகி உயிரிழந்தனர்.
குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே 25 இராணுவத்தினர் உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 50 இடங்களில் காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் சதிச் செயல்கள் இருக்கக்கூடும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கமல் பெல்ட்ஜவுட் குற்றஞ்சாட்டியுள்ளார்.