SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 864 மில்லியன் செலவில் 793 செயற்றிட்டங்கள் நிறைவு! விமர்சனங்கள் தாண்டி வெற்றி என அங்கஜன் பெருமிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 864 மில்லியன் செலவில் 793 செயற்றிட்டங்கள் நிறைவு! விமர்சனங்கள் தாண்டி வெற்றி என அங்கஜன் பெருமிதம்..

“நிறைவான கிராமம்” திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் சுமார் 864 மில்லியன் (864,787,865.00) ரூபா செலவில் 793 செயற்றிட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் தெ தெரிவுசெய்யப்பட்டு முதன்மைப் படுத்தப் பட்ட திட்டங்களே இவ்வாறு நிறைவடைந்த நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் ஆரம்பித்தபோது பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் குறித்த திட்டத்திற்கான நிதி தெடர்ந்து கிடைக்குமா? அல்லது அடிக்கல் நாட்டுடன் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளியிட்டனர். 

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உறுதியான செயற்பாடு காரணமாக குறித்த திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 5 திட்டங்களுக்காக சுமார்11 மில்லியன் (11,844,604.00) ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 40 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் ரூபா (59,693,090.00) 

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் (55,719,191.00)

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 18 திட்டங்களுக்காக சுமார் 29 மில்லியன் ரூபா (29,849,928.00) 

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 54 திட்டங்களுக்காக 79 மில்லியன் (79,600,00.00)

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 14 திட்டங்களுக்காக சுமார் 17 மில்லியன் ரூபா (17,742,438.00) 

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் ரூபா (55,719,191.00) 

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 49 மில்லியன் ரூபா (49,247,820.00)

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் ரூபா (59,700,000.00)

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 66 திட்டங்களுக்காக சுமார் 89 மில்லியன் ரூபா (89,550,000.00)

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 52 திட்டங்களுக்காக சுமார் 61 மில்லியன் ரூபா (61,690,000.00)

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 80 திட்டங்களுக்காக சுமார் 119மில்லியன் ரூபா (119,400,000.00) 

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 50 திட்டங்களுக்கக சுமார் 69 மில்லியன் ரூபா (69,650,000.00)

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 திட்டங்களுக்காக சுமார் 69 மில்லியன்  ரூபா (69,592,652.00) 

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 29 திட்டங்களுக்கக சுமார் 35 மில்லியன் ரூபா (35,794,240.00)  செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.