சமூகத்தில் நல்லவர்களாக வாழுங்கள்..! உங்களை செயற்பாடுகளை பார்த்தே சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யமுடியும்! யாழில் இராணுவ தளபதி..
கடந்தகாலத்தைபோல் இனியும் பிழையான வழியில் செல்லாது சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள் பழையவற்றை மறந்து நல்லதை சிந்தித்து சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
மேற்கண்டவாறு முன்னாள் போராளிகளை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடும் போது தெரிவித்துள்ளார். நீங்கள் இன்று சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும். உங்கள் விடுதலையைப் பற்றி பார்க்கிறார்கள் அவதானிக்கிறார்கள் எனவே நீங்கள் சமூகத்தில் நல்லவர்களாகச் செயற்பட வேண்டும்.
நீங்கள் முன்னாள் போராளிகள் நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். அதையெல்லாம் மறந்து இராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.
வீடு கட்டித் தருவது என்றாலும் சரி, வேறு ஏதாவது உதவி என்றாலும் நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம். ஏனென்றால் அது எமது கடமையாகும். உங்களை எமது சகோதரர்களாகப் பார்க்கின்றோம்.
எனவே நீங்களும் அதேபோல் நேரான பாதையில் பயணியுங்கள். உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.