வரலாறு காணாத வெப்பம்!! -நெருப்பு-அடுப்பு இல்லாமலே ஆபாயிலாகும் முட்டை-

ஆசிரியர் - Editor II
வரலாறு காணாத வெப்பம்!! -நெருப்பு-அடுப்பு இல்லாமலே ஆபாயிலாகும் முட்டை-

கிரீஸ் நாட்டில் 30 வருடங்களின் பின் கொளுத்தும் வெயிலில் நெருப்பு, அடுப்பு இல்லாமலே திறந்த வெளியில் முட்டையை ஆப் பாயில் போடும் வீடியோ வெளியாகி உள்ளது. 

அந்நாட்டில் உள்ள மக்கள் வெயிலின் உஷ்ணத்தை குறைக்க கடற்கரை, நீர் வீழ்ச்சி உள்ளிட்ட தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தலைநகர் ஏதென்ஸ்சில் உச்சபச்ச வெப்பமாக 44 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு காட்டுத் தீ வனத்தை கபளீகரம் செய்து வருவதால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு