SuperTopAds

தடுப்பூசி தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
தடுப்பூசி தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஜேர்மன் அரசின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், தடுப்பூசி பெறாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் chief of staff என்னும் பொறுப்பிலிருக்கும் அலுவலரான Helge Braun என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள Braun, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டுத் திடல்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என்றார்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளுவது கடுமையான தொற்றிலிருந்து பாதுகாக்க இன்றியமையானது என்பதாலும், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்பதாலும் மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் Braun.