தற்போதே உறுதியாகி விட்ட 2020 இன் வெற்றி…!
உறுதிமொழிகளை நிறைவேற்றும் பயணத்தை ஆரம்பித்துவிட்டோம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அரசியல் வெற்றி இலக்கை அடைவதற்கான பயணத்தை ஆரம்பிக்க நம்பிக்கையில்லா பிரேரணை முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை.
அவற்றை நிறைவேற்றுவதற்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றியினை கொண்டாடும் வகையில் நேற்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்,
ஐக்கிய தேசிய கட்சி பலம் வாய்ந்த கட்சி என்பதை பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிரூபித்து விட்டனர். நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி கூட்டு எதிர்க்கட்சிக்கு பாரிய பதிலடியாக காணப்படுகின்றது. தேசிய அரசாங்கம் மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவில்லை. எப்படி செயற்பட வேண்டும் என நினைவுப்படுத்தினர். மக்களுக்காக பாரிய மாற்றங்களை ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தும்.
எனக்கு எதிராக கூட்டு எதிர்கட்சயினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை எனக்கு எதிரானது மட்டுமல்ல தேசிய அரசாங்கத்திற்கும் நல்லாட்சிக்கும் எதிரானதாகவே காணப்பட்டது. கட்சியில் காணப்பட்ட ஒரு சில குறைகளை மையப்படுத்தி சில விசமிிகள் கட்சிக்குள் பிள வினை ஏற்படுத்த முற்பட்டனர். அவர்களின் முயற்சிகள் தற்போது தோல்வியடைந்துள்ளன என்றார்.