SuperTopAds

கொரோனா வைத்தியசாலையில் திடீர் தீ!! -44 நோயாளிகள் பலி: 67ற்கும் மேற்பட்டோர் காயம்-

ஆசிரியர் - Editor II
கொரோனா வைத்தியசாலையில் திடீர் தீ!! -44 நோயாளிகள் பலி: 67ற்கும் மேற்பட்டோர் காயம்-

ஈராக் நாட்டின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா வைத்தியசாலையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 நோயாளிகள் பலியாகினர். 

மேலும் இவ்விபத்தில் சிக்கிய 67ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டில் இருந்துவரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.