இலங்கையை மிரட்டும் “டெல்ட்டா” வகை திரிபு வைரஸ்! 24 ஆக உயர்ந்த தொற்றாளர் எண்ணிக்கை, 2ம் கட்ட ஆய்வுகள் ஆரம்பம்..
டெல்ட்டா வகை திரிபு வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 96 உயிரி மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மாதிரிகள் எழுமாறாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் ஒரு வாரத்தில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.