உணவு தேடி 30 நாட்களில் 330 கி.மீ பயணம் செய்த யானைக்கூட்டம்!!
சீனா நாட்டின் யுனான் மாகாணத்தில் உலாவரும் யானைக்கூட்டம் கடந்த 30 நாட்களில் 330 கிலோ மீட்டர் பயணித்திருப்பதாக அவற்றை கண்காணிக்கும் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதிய உணவு கிடைக்காததால் தனது வாழிடத்தை விட்டு வெளியேறிய 15 காட்டுயானைகள் நடந்தே குன்மிங் நகரை வந்தடைந்தன.
தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக யுக்சி நகரில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம் தற்போது மலை பகுதியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.