ஆர்ப்பாட்டங்களை நடத்துவோர் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்கள் மிக மோசமானவை! சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை..
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோர் கைது செய்யப்படும் சம்பவங்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் சம்பவங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றது.
பணிப்பாளர் நாயகம் பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது கடும் ஆட்சேபணையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.சில சந்தர்பங்களில் தங்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை
நீதவான்கள் பிணையில் விடுதலை செய்த பின்னரும் அவர்களை சில தனிமைப்படுத்தல் முகாமிற்கு பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களை எங்கு கொண்டு செல்கின்றோம் என்பதை
அவர்களின் குடும்பத்தவர்களிற்கு அறிவிக்காமல் கொண்டு சென்றுள்ளனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை கவனத்தில் எடுத்துள்ளது நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட தனி நபர்கள்
நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலவந்தமாக பிடிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொது சுகாதார பரிசோதகர்கள் போன்ற சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சிறிய ஆதாரமும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.