திருமணத்திற்கான கட்டுப்பாடு தளர்வு உள்ளிட்ட பல திருத்தங்களுடன் புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை வெளியாகவுள்ளது!
திருத்தம் செய்யப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தனவினால் வெளியிடப்படவுள்ளது.
என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். சுகாதார வழிகாட்டுதல்கள் பல திருத்தம் செய்யப்படவுள்ளதுடன்,
பல கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற விடயங்கள் புதிய சுகாதார வழிகாட்டலில் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை திருமணங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பது போன்ற புதிய விதிமுறைகளைக் கொண்டிருக்கும்,
என கூறியிருலுக்கும் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருடன், வழிபாட்டுத் தலங்களை
மீண்டும் திறக்க அனுமதிக்கும் என்றும் தெரிவித்தார்.