24 மணி நேரமாக பற்றி எரியும் தொழிற்சாலை!! -40 பேர் பலி: மாடியிலிருந்து குதித்ததில் பலர் காயம்-
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்பத்தில் 40ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலையில் தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து மாடியில் இருந்து கீழே குதித்ததில், சிலருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி, பின்னர் விறுவிறுவென பரவியது.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் மேல் தளங்களில் உள்ள ஊழியர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
உயிருக்குப் பயந்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.