SuperTopAds

ஹைதி ஜனாதிபதியை கொலை செய்த 4 பேர் சுட்டுக்கொலை: 2 பேர் கைது!! -சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலைவர்கள்-

ஆசிரியர் - Editor II
ஹைதி ஜனாதிபதியை கொலை செய்த 4 பேர் சுட்டுக்கொலை: 2 பேர் கைது!! -சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலைவர்கள்-

ஹைதி ஜனாதிபதியை சுட்டுக் கொலை செய்தவர்களை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களில் 4 பேரை சுட்டுக்கொலை செய்ததுடன், மேலும் இருவரை கைது செய்துள்ளனர். 

ஹைதி தீவின் ஜனாதிபதி ஜோவெனல் மாய்சேவின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்தது. ஆனால் ஒரு ஆண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன.

இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. அப்போது உள்ளே இருந்த ஜனாதிபதியின் ஜோவெனல் மாய்சேவை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவையும் சுட்டனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனாதிபதி கொலை செய்யப்பட்டதால் ஹைதி நாட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சண்டை நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களில் 4 பேரை சுட்டுக்கொன்றனர். 2 பேரை கைது செய்தனர்.

இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஜனாதிபதி கொல்லப்பட்டதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.