விடுதலை புலிகளின் புகைப்படம் மற்றும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வைத்திருந்த 21 வயது இளைஞன் கைது!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புகைப்படங்களை தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குற்றச்செயலுக்காக இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய,
உதயபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபரான 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் கையடக்கத்தொலைபேசியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.