யாழ்.மாநகரில் இரு நகைக்கடைகளில் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று! இரு கடைகளும் முடக்கம்..

யாழ்.மாநகரில் இரு நகைக்கடைகள் யாழ்.மாநகரச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முடக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.மின்சார நிலைய வீதியில் உள்ள இரு நகைக்கடைகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டு நகைக் கடைகளிலும் பணியாற்றுபவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில்
யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டன.