யாழ்.மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இருந்தும் சிலர் வீடுகளில் பதுங்குகிறார்கள்! யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு, தேவையற்ற மரணத்தை தவிர்க்குமாறும் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இருந்தும் சிலர் வீடுகளில் பதுங்குகிறார்கள்! யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு, தேவையற்ற மரணத்தை தவிர்க்குமாறும் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தொற்று அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கேட்டுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, கடந்த மாதத்திலிருந்து மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் பதிவாகின்றன எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் சற்றுஅவதானமாக செயற்படவேண்டும். 

சிலர் கொரோனா தொற்று அறிகுறி காணப்படும்போது வீடுகளில் இருந்தவாறு தமக்கு சிகிச்சை அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். எனினும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் 

சில பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன அதாவது நோய் தொற்றுக்கு உள்ளாகி நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது சில வேளைகளில் இறப்பு சம்பவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. 

எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் அதாவது நோய் அறிகுறி காணப்படும் இடத்தில் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை முடிவினை பெற்று

வைத்திய ஆலோசனையைப் பெற்று செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு