யாழ்.தொல்புரம் முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்!

யாழ்.தொல்புரம் பகுதியில் உள்ள சிவபூமி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
64 வயதான பொன்னையா சத்தியகுணசேகரன் என்ற குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து அடுத்தகட்டம் எடுக்கவேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை
சுகாதார பிரிவிர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.