யாழ்.மாவட்டம் தற்போதும் மிகுந்த அபாயத்தில் உள்ளது, 5 கிராமங்கள் முடக்கலில், மேலும் ஒரு பகுதி முடக்கப்படலாம். மாவட்ட செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தற்போதும் மிகுந்த அபாயத்தில் உள்ளது, 5 கிராமங்கள் முடக்கலில், மேலும் ஒரு பகுதி முடக்கப்படலாம். மாவட்ட செயலர் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு தீவிரமாக உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், 

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 1362 ஆக உயர்வடைந்துள்ளது. 97 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் 

தொடர்பில் இருந்த 4321 குடும்பங்களைச் சேர்ந்த 14366 தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த சில கிராம சேவையாளர் பிரிவுகளை ஏற்கனவே விடுவித்துள்ளோம். 

இருந்தபோதும் நேற்று மாலை தொடக்கம் காரைநகர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கள்ளந் தாழ்வு கிராமம் மற்றும் தள்ளி தெருப்பகுதியையும் சேர்ந்து 

மாவட்டத்தில் 5 கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசிப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் 

எதிர்பார்த்த இலக்குகள் ஒவ்வொரு நாளும் அடையப் பெற்று வருகின்றது.ஒவ்வாமை உடையவர்களுக்கு நாளை சனிக்கிழமைதடுப்பூசி ஏற்றும் நாளாக 

அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரியவர்கள் அதனை சென்று தவறாது பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் அபாயம் தொடரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் மாவட்ட செயலர் கேட்டுள்ளார். 

அதேபோல் யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் ஒரு பகுதியை முடக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு